Wednesday, 3 October 2018

ராஜீவ் கொலை வழக்கில் விடை தெரியாத அந்த 37 மர்மங்கள்!! K.S.ராதாகிருஷ்ணனின் நெத்தியடி கேள்விகள்....

ராஜீவ் கொலை வழக்கில் விடை தெரியாத அந்த 37 மர்மங்கள்!! K.S.ராதாகிருஷ்ணனின் நெத்தியடி கேள்விகள்....

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் 7 தமிழர்களையும் விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு உள்ளது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

இந்த வழக்கில் விடை தெரியாத ஏராளமான கேள்விகள் இருக்கின்றன. இவை தொடர்பாக மூத்த வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

1. 1991 ம் வருடம் மே மாதம் 21 ம் தேதி டெல்லியிலிருந்து தேர்தல் பிரச்சாரத்திற்குக் கிளம்பினார் ராஜீவ் காந்தி. அவர் ஒரிசா, ஆந்திரா வழியாக சென்னை வந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த வாழப்பாடி இராமமூர்த்தி அந்த இடத்தில் கூட்டம் நடத்த வேண்டாம் என சொல்லியும்; ஏன் அங்கு கூட்டம் நடத்தப்பட்டது. ஸ்ரீபெரும்புதூருக்கு ராஜீவை எப்படியாவது வரவழைத்துவிட வேண்டும் என்று எங்காவது திட்டம் தீட்டப்பட்டதா?

2. புவனேஷ்வர், விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் ராஜீவ் பிரச்சாரத்திற்கு சென்றபோது அவருடன் இருந்தவர் பாதுகாப்பு அதிகாரி ஓ.பி.சாகர். ஆனால் அவர் சென்னைக்கு ராஜீவுடன் வரவில்லை ஏன்?

3. பல்கேரிய நாட்டைச் சேர்ந்த தொலைக்காட்சிப் பத்திரிகையாளர்கள் ராஜீவ் காந்தியின் சுற்றுப் பயணத்தில் உடன் வந்தார்கள். அவர்களுடைய வேலை, ராஜீவ் பிரச்சாரத்தை வீடியோவில் பதிவு செய்வது. ஒரிஸாவிலும், ஆந்திராவிலும் ராஜீவ் செய்த முதல்கட்ட சுற்றுப் பயணத்தில் கலந்துகொண்ட அவர்கள், ராஜீவ் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டங்களுக்கு செல்லவில்லை. அவர்கள் பயணம் செய்த விசேஷ விமானத்தின் பைலட்டுடன் விசாகப்பட்டினத்தில் ஒரு ஆடம்பர ஹோட்டலில் தங்கியிருந்தார்கள். அப்படியானால் அவர்கள் உடன் வந்த காரணம் என்ன?

4. ராஜீவ் கிளம்புகிற விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. உடனே விமான நிலையத்தில் இருந்த சர்க்யூட் ஹவுசுக்குத் திரும்பினார் ராஜீவ். கோளாறு சரிசெய்யப்பட்டுவிட்டது என்கிற தகவல் அப்போதைய ஆந்திர முதல்வர் விஜயபாஸ்கர ரெட்டி மூலமாக கிடைத்தவுடன் விமான நிலையம் திரும்பினார் ராஜீவ். இந்தக் குழப்பத்தில் இந்த இரண்டு பல்கேரிய நாட்டு பத்திரிகையாளர்கள், பாதுகாப்பு அதிகாரி சாகரை தங்கள் காரில் ஏற்றிக் கொண்டு தாமதமாக விமான நிலையத்துக்கு வந்தார்கள். இதனால் ராஜீவுடன் விமானத்தில் பயணம் செய்ய சாகரால் முடியவில்லை. அனுபவம் மிக்க அந்தப் பாதுகாப்பு அதிகாரியை ராஜீவுடன் போகவிடாமல் செய்தது ஏன்?

5. சென்னையில் ராஜீவின் பாதுகாப்பு அதிகாரியாக செல்ல வேண்டிய பி.சி.குப்தா, சென்னை விமான நிலையத்தில் ராஜீவுக்காக காத்திருந்தார். அதே விமானத்தில் வந்திருக்க வேண்டிய சாகரிடமிருந்து கைத்துப்பாக்கியை அவர் பெற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் சாகர் வராததால் கைத்துப்பாக்கி இல்லாமலேயே குப்தா, ராஜீவுடன் செல்ல நேர்ந்தது. இதற்கு ஏதாவது உள்நோக்கம் உண்டா?

6. ராஜீவ் மீனம்பாக்கத்திலிருந்து கிளம்பியவுடன் ராமாவரம் அருகே பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் இரண்டு பெண்கள் அவர் காரில் ஏறினார்கள். அவர்களுடைய அடையாளங்கள் சோதனைக்கு உள்ளானதா? இன்று வரை அவர்களை ஏன் விசேஷப் புலனாய்வுத் துறை விசாரிக்கவில்லை?

7. யார் அந்த பல்கேரியர்கள்? அவர்கள் எங்கு சென்றார்கள்? யார் அந்த இரண்டு அயல்நாட்டு பெண் பத்திரிகையாளர்கள்? அவர்கள் எங்கு சென்றார்கள்?

8. அந்த இரண்டு பத்திரிகையாளர்களும் ராஜீவை பேட்டி கண்டார்கள். ஆனால் தா.பாண்டியனும், மரகதம் சந்திரசேகரும் அவர்கள் என்ன பேசினார்கள் என்பது தெரியாது என்றார்கள். இவர்கள் எதை மறைக்க முயலுகிறார்கள்? ஏன்?

9. மூன்றாவது உலக நாடுகளின் தலைவர்களை அப்புறப்படுத்துவதில் அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.வுக்கு அதிக அக்கறை உண்டு. அந்த எண்ணம் ராஜீவ் விஷயத்தில் இருந்ததா?

10. தான் கொலை செய்யப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு, பாகிஸ்தான் ஜனாதிபதி ஜியா-உல்-ஹக்கை கொன்றது சி.ஐ.ஏ.தான் என்றார் ராஜீவ். அவர் ஏன் அப்படிச் சொல்ல வேண்டும்? அவரை சொல்லத் தூண்டிய காரணம் என்ன? தனக்கெதிராகவும் இப்படி ஒரு திட்டம் இருக்கலாம் என்பது அவருக்கு முன்கூட்டியே தெரியுமா?

11. 1991 ஜுலை மாதம் அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் எஸ்.பி. சவான், எல்.டி.டி.ஈ.யைத் தவிர வேறு சில சர்வதேச நிறுவனங்களும், பலம் வாய்ந்த வெளிநாட்டு சக்திகளும் ராஜீவ் கொலையின் பின்னணியில் இருக்கிறார்கள் என்றார். உள்துறை அமைச்சர் அப்படி சொல்லக் காரணம் என்ன என்பதை விசேஷ புலனாய்வுத்துறை ஏன் விசாரிக்கவில்லை?

12. வளைகுடா போரின்போது அமெரிக்க விமானங்களுக்கு இந்தியா எரிபொருள் கொடுத்து உதவியது. இந்த உதவியைச் செய்த சந்திரசேகர் அரசைக் கடுமையாகக் கண்டித்தார் ராஜீவ் காந்தி. அமெரிக்காவிற்கு இதனால் ராஜீவ் மீது ஏற்பட்ட கோபத்தையும், இந்தக் கொலையின் பின்னணியில் சி.ஐ.ஏ.வுக்கு பங்கு உண்டா என்பதையும் ஏன் புலனாய்வுத்துறை விசாரிக்கவில்லை?

13. பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராபத், ராஜீவ் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று அன்றைய பிரதமர் சந்திரசேகரிடம் தெரிவித்தார். அவருக்கு இந்தத் தகவல் எங்கிருந்து கிடைத்தது? யார் மூலமாக ராஜீவுக்கு மிரட்டல்? என்பதை ஏன் புலனாய்வுத் துறை விசாரிக்கவில்லை? மேற்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளில் கொலைக்கான திட்டம் தீட்டப்பட்டு இருந்தால் மட்டுமே அரபாத்திற்கு இந்தப் பின்னணி தெரிய வாய்ப்புண்டு!

14. மரகதம் சந்திரசேகர் ராஜீவ் காந்தியுடன் கூட்டம் நடந்த இடத்திற்கு வந்தார். அவருடைய மகள் லதா பிரியகுமார் அரக்கோணத்திலிருந்து வந்தார். அவரது மகன் லலித் சந்திரசேகர் மனைவி வினோதினியுடன் எங்கிருந்து வந்தார் என்பதை விளக்கவே இல்லை. வினோதினி இலங்கையைச் சேர்ந்த ஜூனியஸ் ஜெயவர்த்தனாவின் மகள் என்பது தெரிந்தும் அவரை ஏன் விசாரிக்கவில்லை? சம்பவ இடத்தில் அந்தக் குடும்பத்தினர் இருந்தும் அவர்களை ஏன் விசாரிக்கவில்லை?

15. சிவராசனும், தாணுவும் இராஜீவ் வளையத்தில் செல்ல யார் உதவினார்கள் ? என்பது பற்றியும் இதுவரை தெரியவில்லை.

16. சிவராசனின் தாயாரும், வினோதினியின் தந்தையும் சிங்களவர்கள் தான். சம்பவ இடத்தில் அவர்கள் இருந்தார்கள். அவர்கள் இலங்கை ஜனாதிபதி பிரேமதாஸாவின் தூதுவர்களாக இருக்க வாய்ப்புண்டு. இந்திய அமைதிப்படை விவகாரத்தில் பிரேமதாஸாவுக்கு ராஜீவ் மீது கோபம் உண்டு. அந்தக் கோணத்தில் ஏன் விசாரணை செய்யப்படவில்லை?

17. விடுதலைப் புலிகள், இலங்கை அரசு இரண்டுக்கும் ஒரு விஷயத்தில் ஒற்றுமை உண்டு. இந்திய அமைதிப்படை இலங்கையில் நுழையக் காரணமாக இருந்த ராஜீவ் மீது இரு தரப்பினருக்கும் கோபமுண்டு. இந்த விஷயத்தில் எதிர்தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகர் விசேஷப் புலனாய்வுத் துறைக்கு ஒரு சவால் விட்டார். வினோதினியின் பூர்வீகம் என்ன? அவரும், அவர் குடும்பத்தினரும் அப்பாவிகள் என்பதை நிரூபித்தால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவருமே தானாகவே தங்கள் குற்றத்தை ஒப்புக் கொள்வார்கள் என்றார். இறுதிவரை அவர் சவால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் விசாரிக்கப்படவும் இல்லை.

18. காமினி திசநாயகா, அத்துலத்முதலி, விக்கிரமசிங்கே இவர்கள் எல்லாம் இலங்கையின் முக்கிய அரசியல்வாதிகள். இவர்கள் கொலை செய்யப்பட்ட போது அந்தப் பழி இலங்கை அதிபர் பிரேமதாஸாவின் மீது சுமத்தப்பட்டது. ராஜீவ் விஷயத்தில் ஏன் அந்தக் கோணத்தில் விசாரணை இல்லை?

19. புலிகளையும், அதன் தலைவர் பிரபாகரனையும் சம்பந்தப்படுத்த என்ன பலத்த ஆதாரம் புலனாய்வுத் துறையிடம் உள்ளது?

20. பொட்டுவும், சிவராசனும் ரேடியோ மூலம் பேசியதை விசேஷப் புலனாய்வுத்துறை கேட்டதாகச் சொல்லப்படுவது ஏன் ஒரு கற்பனையான ஆதாரமாக இருக்கக்கூடாது?

21. பல்வேறு நாட்டு ஆயுத வியாபாரிகள், பிரதமர் என்கிற முறையில் ராஜீவுடன் தொடர்பு வைத்திருந்தார்கள். கூலிப்படைகள் மூலமாக அவர்கள் ஏன் இந்தக் காரியத்தை செய்திருக்கக்கூடாது?

22. சிறப்பு விசாரணைக் குழு அமைத்து சந்திரா சுவாமி, சுப்பிரமணியன் சுவாமி, சந்திரசேகர், ஆயுத விற்பனையாளர் கசோகி ஆகியோரையும் ராஜீவ் கொலை வழக்கில் விசாரிக்க வேண்டும் என ஜெயின் கமிஷன் கூறியுள்ளதே? விசாரணை நடைபெற்றதா? அதன் முடிவு என்ன?

23. அரசாங்கமே ஏதும் ஒரு முடிவுக்கு வராத போது சுப்பிரமணிய சுவாமி மட்டும் விடுதலைப் புலிகள் தான் ராஜிவை கொன்றார்கள் என கூறியதன் மர்மம் என்ன? பல கோணங்களில் விசாரிக்கப்பட வேண்டிய ஒரு கொலைப் பின்னணியை விடுதலைப் புலிகள் கொன்றார்கள் என்ற ஒற்றைக் கோணத்தில் மட்டும் நடத்த வற்புறுத்திய கார்த்திகேயனின் நோக்கம் என்ன?

24. சிறப்பு விசாரணை அதிகாரி ரகோத்தமன் இந்திய புலனாய்வு துறையின் இயக்குனராக இருந்த எம்.கே. நாராயணன் ராஜீவ் கொல்லப்பட்ட அந்த இடத்தில் பிடிக்கப்பட்ட வீடியோ டேப்பை தராமல் மறைக்கிறார் என்ற பகிரங்கக் குற்றச்சாட்டுக்கு பதில் என்ன?

25. திருச்சி வேலுச்சாமி கூற்றுபடி சுப்ரமணியன் சாமி இராஜீவ் படுகொலைக்கு ஒரு சிலநிமிடங்களுக்கு முன்பே இராஜீவ் கொலை செய்யப்பட்டார் என்று கூறியதை பற்றி ஏன் இதுவரை விசாரிக்கவில்லை.

26. ராஜீவ் கொலை வழக்கில் ஜெயின் மற்றும் வர்மா கமிஷன் அரசாங்கத்துக்கு கொடுத்த முக்கியகோப்புகள் அடங்கிய (File No. 1/12014/5/91-IAS/DIII) எங்கே? சந்திரா சாமியின் நெருங்கிய நண்பரும் அன்றைய பிரதம மந்திரியுமான நரசிம்மராவ் அந்த முக்கியக் கோப்புகளை அழித்ததின் மர்மம் என்ன? எந்த முக்கிய நாடுகளையும், நபரையும் காப்பதற்காக அந்த கோப்புகள் அழிக்கப்பட்டது?

27. வாழப்பாடி ஏற்றுக் கொள்ளவில்லை. மூப்பனார் அக்கறை காட்டவில்லை. ஆனால் மரகதம் சந்திரசேகர் மட்டும் டெல்லி சென்று ஏன் ஸ்ரீ பெரும்புதூருக்கு வரவேண்டும் என்று ராஜீவை வற்புறுத்தியது உண்மையா?

28. மறுபடியும் அமைதிப்படை தங்கள் நாட்டில் நுழையலாம் என்கிற எண்ணத்தில் இந்தியாவுக்கு வலுவான தலைவர் இருக்கக் கூடாது என்று இலங்கை அரசு ஏன் நினைத்திருக்கக் கூடாது?

29. விமான நிலையத்தில் ராஜீவை சந்தித்தார் கவிஞர் காசி ஆனந்தன். அவர் பிரபாகரனிடமிருந்து ராஜீவுக்கு கொண்டு வந்த தகவல் என்ன? ஈழ விடுதலைக்கு ராஜீவின் உதவி தேவை” என்று பிரபாகரன் காசி ஆனந்தன் மூலமாக வேண்டுகோள் விடுத்திருந்தால் ஏன் அவரை பிரபாகரன்கொலை செய்ய வேண்டும்?

30. இந்தியா மற்றும் தமிழகத்தில்தான் தனக்கு அனுதாபமும், ஆதரவும் கிடைக்கும் என்பதுபிரபாகரனுக்கு தெரியும். அப்படியிருக்கும்போது இந்த மக்களின் வெறுப்பை சம்பாதிக்கிற தவறைச்செய்து, நாட்டைவிட்டே துரத்தப்பட்டு தடை செய்யப்படுகிற அளவுக்கான முட்டாள் தனத்தையாபிரபாகரன் செய்தார்?

31. லதா கண்ணன், ராஜீவ் காந்தியை நிறுத்தி கவிதை படித்தார். அதுவே பக்கத்திலிருந்த தனு என்கிற மனித வெடிகுண்டு வெடிக்கக் காரணமாக இருந்தது. ஏன் அவர் பெயர் குற்றவாளிப் பட்டியலில்இல்லை? லதா கண்ணனை பயன்படுத்தி தான் தனு உள்ளே வந்தார். இறந்து போன ஹரிபாபு குற்றவாளி என்றால் லதா கண்ணனை ஏன் சேர்க்கவில்லை? இது சம்பந்தப்பட்டவர்கள் மீது புலனாய்வுத் துறைக்கு ஏன் இத்தனை பரிவு?

32. தனு, சுபா, சிவராசன் மூவரையும் ஸ்ரீ பெரும்புதூருக்கு அழைத்து வந்தவர் லதா பிரியகுமார் என்று சொல்லப்பட்டது. குறிப்பாக பெண்கள் பகுதிக்கு அழைத்து வந்து லதா கண்ணனிடம் அவர்களுக்கு உதவும்படி சொன்னார். அவர் மீது ஏன் குற்றம் சுமத்தப்படவில்லை?

33. ராஜீவின் பயணத் திட்டத்தை தீட்டிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மார்கரெட் ஆல்வாவின் வேண்டுகோளுக்கு இணங்க தான் சிவராசனுக்கு பெங்களூரில் வீட்டை வாடகைக்குக் கொடுத்ததாக ரெங்கநாதன் வாக்குமூலம் அளித்தார். இதில் உண்மை உண்டா என்பதை விசாரித்தார்களா?

34. வெளிநாட்டு உளவு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் சங்கேத மொழியில் சந்திராசாமி மற்றும் சுப்ரமணியன் சாமியிடம் ராஜீவ் கொலை பற்றி நடத்திய உரையாடல் என்று பதிவு செய்து வைத்திருந்த முக்கிய ஆதாரம் ஒன்று பிரதமர் அலுவலக உயர் அதிகாரி தொலைத்துவிட்டதாக கூறுவது எப்படி?

35. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அந்த இடத்தில் கூட்டம் வேண்டாம் என்று மறுத்த போதும், டெல்லி மேலிடத்தில் இருந்த மார்கிரெட் ஆல்வா அங்கு தான் நடத்தியாக வேண்டும் எனக் கூறியது உண்மையா என்று விசாரிக்கப்பட்டதா?

36. பெல்ட் பாம் (வெடிகுண்டு) தயாரிக்கப்பட்டது எங்கே, யார் தயாரித்தது, என்று இதுவரையில் விசாரிக்கவே இல்லை என சிறப்பு விசாரணை அதிகாரி ரகோத்தமன் தெரிவித்திருக்க வெடிகுண்டுக்கு பயன்படுத்தப்பட்ட பேட்டரி வாங்கிக் கொடுத்ததாக சொல்லி பேரறிவாளனுக்கு தூக்கு தண்டனை அறிவித்து 22 ஆண்டுகள் சிறையில் அடைத்திருப்பது எதனால்?

37. ராஜீவ் கொலை வழக்கில் 26 ஆண்டுகளாக விடை தெரியாத கேள்விகள் இது போன்று பல இருக்க காவல் துறை அதிகாரிகளின் விசாரணையில் ஒப்புக் கொண்டதாக சொல்லி ஒருவருக்கு தூக்கு தண்டனை வழங்குவது உலகில் எந்த நாடுகளின் நீதித்துறையும் பின்பற்றாத ஒரு நடைமுறையை இந்தியாவில் பின்பற்றுவது நியாயத்திற்கும், நேர்மைக்கும் உகந்ததா?

இவ்வாறு கே.எஸ். ராதாகிருஷ்ணன் பதிவு செய்துள்ளார்.

திருச்சி வேலுச்சாமியை கேட்டால் இதுபோல இன்னும் நிறைய தகவல்களை சொல்லுவார். குறிப்பாக சுப்பிரமணியசாமி மீதுள்ள சந்தேகங்கள்....

Thursday, 27 September 2018

பாஜகவிற்கு 14 கேள்விகள் :

பாஜகவை வெளுத்து வாங்கும் 14 கேள்விகள்.

1.இந்திய வரலாற்றில் இதற்கு முன்பு எப்போதேனும், கற்பழிக்கப்பட்ட ஒரு பெண்ணின் தந்தையை போலிஸ் நிலையத்திலேயே ஒரு எம்.எல்.ஏ. கொலை செய்ததாக கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

2.இந்திய வரலாற்றில் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டதுண்டா? தேர்தல் ஆணையரான பிறகு அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டை மாநில அரசு திரும்பப்பெற்றதுண்டா?

3.இந்திய வரலாற்றில் பிரதமரின் கல்வித்தகுதியை எப்போதாவது ரகசியமாக மறைத்து வைத்ததை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

4.இந்திய வரலாற்றில் தலைமை நீதிபதியே தனது வழக்கில் நீதிபதியாக இருந்ததை கேட்டிருக்கிறீர்களா?

5.இந்திய வரலாற்றில் எம்.எல்.ஏ. ஒருவரால் கற்பழிக்கப்பட்ட பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள், அந்த மாநில முதல்வரின் வீட்டுமுன் தற்கொலைக்கு முயன்றதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

6.இந்திய வரலாற்றில் ரூபாய் நோட்டு கிடைக்காமல் திண்டாடியதாக எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

7.இந்திய வரலாற்றில் தலைமைத் தேர்தல் ஆணையர் தேர்தல் தேதியை அறிவிப்பதற்கு முன் பா.ஜ.க.வின் ஐ.டி.விங் தலைவர் தேதிகளை அறிவித்ததை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

8.இந்திய வரலாற்றில் ரூபாய் நோட்டுக்களை பெறுவதற்காக நீண்ட வரிசையில் மக்களைக் காக்கவைத்த நிகழ்வை கேள்விப்பட்டதுண்டா?

9.இந்திய வரலாற்றில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை வெளியிடுவதற்கு முன்பு, தீர்ப்பு நகலை சட்டத்துறை அமைச்சர் வாங்கிய நிகழ்வை கேள்விப்பட்டதுண்டா?

10.இந்திய வரலாற்றில் ராணுவ வீரர்கள் தங்களுக்கு உணவு கிடைக்கவில்லை என்று புகார் செய்ததை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

11.இந்திய வரலாற்றில் கற்பழிப்புக் குற்றச்சாட்டுக்கு ஆளான குற்றவாளியை பாதுகாக்க மாநில அமைச்சர்களே ஊர்வலம் நடத்தியதை கேட்டிருக்கிறீர்களா?

12.இந்திய வரலாற்றில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு எதிராக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூடி செய்தியாளர்களைச் சந்தித்து புகார் கூறியதை கேட்டிருக்கிறீர்களா?

13.இந்திய வரலாற்றில் சாலைகளில் கிடந்த பசு சாணத்தை திண்ணும்படி தாழ்த்தப்பட்ட மக்களை கட்டாயப்படுத்திய சம்பவத்தை கேள்விப்பட்டதுண்டா?

14.இந்திய வரலாற்றில் மதக்கலவரத்தில் ஈடுபட்ட ஒரு குற்றவாளியை பாதுகாக்க, நீதிமன்றக்கூண்டில் ஏறி, தேசியக் கட்சியின் தலைவர் ஒருவர் சாட்சியம் அளித்திருக்கிறாரா?

இந்த 14 கேள்விகள் அனைத்தும் பா.ஜ.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இந்திய சரித்திரத்தில் இடம்பெற்றவை.
அனைத்து

நிகழ்வுகளிலும் பா.ஜ.க. அரசுக்கும், பாஜக ஆட்களுக்கும் தொடர்பு உண்டு.

Wednesday, 26 September 2018

ஈழ விவகாரம் - ஜெயலலிதாவும், திமுகவும்.

#ஈழ_விவகாரத்திலும்_ஊழல் #விவகாரத்திலும்_அதிமுகவும் #ஜெயலலிதாவும்

இந்திய வரலாற்றில் முதன்முறையாக என்று சொல்லும் அளவுக்கு எதிர்க்கட்சியை பார்த்து ஊழல் கட்சி என்று சொல்லும் முதல்வர் அதிமுக முதல்வர் #எடப்பாடிதான். #எதிர்க்கட்சியை ஊழல் கட்சி என்று குற்றம்சாட்டும் முதல்வர் என்ன செய்திருக்க வேண்டும்? அதிகாரத்தில் இருக்கும் முதல்வர் ஆதாரங்களோடு எதிர்க்கட்சித் தலைவர் மீதோ, அவருடைய கட்சி நிர்வாகிகள் மீதோ வழக்குப்போட்டிருக்க வேண்டாமா என்று அரசியல் பார்வையாளர்கள் கேட்கிறார்கள்.

 திமுக ஆட்சியில்தான் ஜெயலலிதா மீதும் அவருடைய அமைச்சர்கள் மீதும் ஊழல் வழக்குத் தொடரப்பட்டு, மரணத்தின்போதுகூட ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்தது.

அப்படிப்பட்ட திமுகவை ஊழல் கட்சி என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க வாய்ப்பிருந்தால் ஜெயலலிதா விட்டு வைத்திருப்பாரா? இப்போது ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணைக்குக்கூட காரணமாக திமுகதான் இருக்கிறது. அந்த கடுப்பிலாவது ஏதேனும் ஆதாரங்களை வைத்து திமுகவினர் மீது ஏன் எடப்பாடியால் வழக்கு தொடரமுடியவில்லை என்று சாமானியர்கள்கூட வினா எழுப்புகிறார்கள்.

இந்நிலையில்தான், ஜெயலலிதாவால் கடுமையாக எதிர்க்கப்பட்ட, விமர்சனம் செய்யப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் திமுகவுக்கு எதிராகவும் அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. 2009 ஆம் ஆண்டு முடிந்த இலங்கை சண்டையை திமுகவும் காங்கிரஸும் தடுத்து நிறுத்த தவறியது ஏன் என்று 10 ஆண்டுகள் கழித்து திடீர் “யானோதயம்” பெற்று, அதாங்க ஞானோதயம் பெற்று இன்றைக்கு ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.

சில நாட்களுக்கு முன் ஊழல் அதிமுக அரசுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை திமுக நடத்தியது. சேலத்தில் ஸ்டாலின் தலைமையில் பிரமாண்டமான ஆர்ப்பாட்டம் நடந்ததைப் பார்த்த எடப்பாடி, அதுபோன்ற ஒரு கூட்டத்தை கூட்ட வேறு ஏற்பாடு பண்ணிருக்கலாம்… தேவையில்லாம அவருடைய அம்மா ஜெயலலிதாவின் புலி எதிர்ப்பு நிலைப்பாடுகளை மக்களுக்கு நினைவூட்டும் வகையில் ஆர்ப்பாட்டத்தை அறிவித்திருக்கிறார். அப்படியானால், ஜெயலலிதா பிரபாகரனை தூக்கில் போடவேண்டும் என்று சொன்னப்போ, இதே எடப்பாடி உள்ளிட்டோர் அவருடைய நிலையை ஏன் எதிர்க்கவில்லை என்ற கேள்வி எழத்தான் செய்கிறது…

இதோ, ஈழப்பிரச்சனையில் ஜெயலலிதாவும் அதிமுகவும் கடந்த காலத்தில் மேற்கொண்டிருந்த நிலைப்பாடுகளையும், கருத்துகளையும் மக்கள் பார்வைக்காக தொகுத்துத் தருகிறோம்…


1990 முதல் 2008 வரை தமிழகத்தில் வாக்கு வாங்குவதற்காக ஜெயலலிதா உதிர்த்த வார்த்தைகள்…

"ராஜீவ் கொலையாளிகளுக்கு நான்தான் தூக்குத் தண்டனை வாங்கி தந்தேன்.."
"உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டு ஒன்பது வருடங்கள் ஆகியும், ஏன் ராஜிவ் கொலையாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றப்படவில்லை"

"கருணாநிதி போராளிகளுக்கு ஆதரவு கொடுத்து தீவிரவாதத்தை வளர்க்கிறார்"..

"ஈழப் போராளிகளின் தீவிரவாத இயக்கத்தை நான்தான் தடை செய்தேன்.."..

"திமுக அரசு கொண்டுவந்த போர் நிறுத்த தீர்மானம், புலிகளுக்கு ஆதரவான தீர்மானம்"..

"போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்..”

"தமிழ் மக்களை இலங்கை ராணுவம் கொல்லவில்லை, தமிழர்களை பிணைகைதிகளாய் பிடித்து கொல்வதே விடுதலைபுலிகள்தான்"..

"பிரபாகரன் சர்வதேச குற்றவாளி, விடுதலைபுலிகள் தீவிரவாத கும்பல், பிரபாகரனை இந்தியாவுக்கு இழுத்து வந்து தூக்கில் இட வேண்டும்"..

“நளினிக்கு தூக்குத் தண்டனையைக் குறைத்து சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்க கருணாநிதி முயலுகிறார்"

"திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் புலிகள் தமிழகத்தில் நிம்மதியாக உலவுகிறார்கள்.”

"திமுக ஆட்சியில் விடுதலை புலிகள் மீண்டும் தலையெடுத்து விட்டார்கள். எனவே பொடா சட்டம் மூலம் வைகோ, சுபவீ, நெடுமாறன் போன்றோரை ஆண்டு கணக்கில் சிறையில் தள்ளினேன்"

 2009 முதல் 2016 வரை தமிழக வாக்காளர்களிடம் வாங்க ஜெயலலிதா உதிர்த்த வாசகங்கள்….

 "அதிமுகவுக்கு வாக்களித்தால் ராணுவத்தை அனுப்பி ஈழம் பெற்றுத்தருவேன்"

"ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்வேன்"

இவை தவிர, ஈழத்தில் போர் உச்சத்தில் இருக்கும்போது, அப்போதைய எதிர்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதா வெளியிட்ட ஒரு அறிக்கையில் இப்படி கூறியிருந்தார்..

போரை நிறுத்தும் அதிகாரம் இந்தியாவுக்கு கிடையாது என்று ஒரு அறிக்கையில் கூறியிருந்தார்…

 “திமுக தலைமையிலான அரசாங்கத்தில் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட (14.10.2008) தீர்மானத்தைப் பார்த்தால், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம்தான் தமிழக மக்கள் மனதில் எழுந்துள்ளது. இலங்கையில் தற்போது நடைபெறும் உள்நாட்டுப் போரை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை என்பதை 5 முறை முதலமைச்சராக 

ரஃபேல் ஊழல் : எளிய விளக்கம் - மோடியின் முகத்திரை கிழிந்தது.

ரஃபேல் ஊழல் : எளிய விளக்கம்
(By Karl Max Ganapathy)

முன்கதை
இந்தியா கடைசியாக வாங்கியது Su-30 எனப்படும் சுகோய் விமானம். ரஷ்யாவிடமிருந்து 1996இல் வாங்கியதுதான் கடைசி. அதன்பிறகு போர் விமானங்களே வாங்கவில்லை.

உள்நாட்டிலேயே போர் விமானம் தயாரிப்பது என்னும் திட்டப்படி, 2001இல் தேஜஸ் எனப்படும் இலக ரக போர் விமானம் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது. ஆனால் உற்பத்தியில் தாமதமானது. (2016இல்தான் விமானப்படையில் சேர்க்கப்பட்டது.) இதற்கிடையில் மிக்21 ரக போர்விமானங்களின் ஆயுள் காலம் முடிந்து வந்த்தால், புதிய போர் விமானங்களின் தேவை உணரப்பட்டது.

2007இல் 126 பல்நோக்கு போர் விமானங்கள் வாங்குவதற்கான டெண்டர் கோரப்பட்டது. பிரான்சின் தஸால்ட் நிறுவனத்தின் ரஃபேல், ரஷ்யாவின் மிக்-25, ஸ்வீடனின் கிரிபென், அமெரிக்காவின் F-16, Boeing F/A-18, Eurofighter Typhoon ஆகியவை பங்கேற்றன. இவற்றில் டைஃபூன், ரபேல் மட்டுமே தகுதி பெற்றன.

பல்வேறு பரிசீலனைகளுக்குப் பிறகு தஸால்ட் நிறுவனத்தின் ரஃபேல்தான் உகந்தது என முடிவானது. 126 ஜெட் போர்விமானங்களில் 18 விமானங்கள் பறப்பதற்குத் தயார் நிலையில் தரப்படும். மீதமுள்ள 108 விமானங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும். தஸால்ட் தொழில்நுட்பத்தை வழங்க, இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் (HAL) விமானங்களை உற்பத்தி செய்யும் என முடிவானது. ஆனாலும், இறுதி விலை எட்டப்படவில்லை.

HAL மற்றும் தஸால்ட் இடையே வேலை ஒப்பந்தம் 2014 மார்ச்சில் கையெழுத்தானது.

2014 ஏப்ரலில் தேர்தல் வருகிறது. பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வருகிறது.

புதிய பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி, எல்லா விஷயங்களும் பரிசீலிக்கப்பட்டு அறிவார்ந்த முடிவு எடுக்கப்படும் என்றார்.

பின் கதை
2015 ஏப்ரலில் பிரதமர் மோடி பிரான்ஸ் செல்கிறார். 36 ரபேல் விமானங்கள் வாங்கப்போவதாக அறிவிக்கிறார்.

126 விமானங்களுக்கான முந்தைய ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டது என்கிறார் மனோகர் பரிக்கர்.

பிரான்ஸ் அதிபர் ஹாலந்த் 2016 ஜனவரியில் தில்லி வருகிறார். 7.8 பில்லியன் டாலர் மதிப்புக்கு ரபேல் விமானங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

இதில் ஊழல் எங்கிருந்து வந்தது ? விவரமாகப் பார்க்கலாம்.

1. விலை
— முந்தைய காங்கிரஸ் அரசு வாங்க இருந்தது சுமார் 600 கோடி ரூபாய் விலையில்.
— மோடி அரசு வாங்குவது சுமார் 1400 கோடி ரூபாய் விலையில்!

2. உற்பத்தி
— முந்தைய காங்கிரஸ் அரசின் ஒப்பந்தப்படி, 18 விமானங்கள் மட்டுமே பறப்பதற்குத் தயாராக வாங்கப்படும். மீதி 108 விமானங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும்
— மோடி ஒப்பந்தப்படி, எல்லாமே பிரான்சில்தான் தயாரிக்கப்படும். மேக் இன் இந்தியா எல்லாம் பிம்பிலிக்கி பிலாப்பி!

3. தொழில்நுட்பம்
— காங்கிரஸ் கால ஒப்பந்தத்தில், தஸால்ட் நிறுவனம் இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்துக்கு தொழில்நுட்ப ஒத்துழைப்பு வழங்கும்
— மோடி அரசு ஒப்பந்தப்படி, “சிலதனியார் நிறுவனங்களுக்கும்” தொழில்நுட்பம் தரப்படும். அந்தத் தனியார் நிறுவனம் எது? அதுதான் ரிலையன்ஸ்.

4. தனியாருக்கு?
— காங்கிரஸ் கால ஒப்பந்தப்படி, தஸால்ட் உடன் எச்ஏஎல் என்னும் பொதுத்துறை நிறுவனம்தான் கூட்டாளி.
— மோடி அரசு ஒப்பந்தப்படி, ரிலையன்ஸ்தான் கூட்டாளி!

5. அனுபவம்
— எச்ஏஎல் விமானத்துறையில் அனுபவம் உள்ள நிறுவனம். ஏற்கெனவே போர் விமானங்களை தயாரித்துக்கொண்டும் உள்ளது. எனவே காங்கிரஸ் அரசு எச்ஏஎல்-தான் உற்பத்தி செய்யும் என்று சொன்னது.
— மோடி அரசில் முடிவு செய்யப்பட்ட ரிலையன்சுக்கு விமானத்துறையில் எந்த அனுபவமும் இல்லை.

6. மோடியின் ஊழல்
— 2015இல் பிரான்சுக்குச் சென்றபோது ரபேல் விமானங்கள் வாங்குவதாக தடாலடியாக அறிவித்தார் மோடி. இதுபோன்ற பல்லாயிரம்கோடி ஆயுதங்கள் வாங்கும் விஷயங்களில் நாடாளுமன்ற நிலைக்குழு, டெண்டர், தொழில்நுட்பக் குழு, மதிப்பீடு, பரிசீலனை என எதுவுமே இல்லாமல் தன்னிச்சையாக முடிவு அறிவிக்கப்பட்டது.

— பாதுகாப்புத் துறை அமைச்சரும்கூட உடன் அழைத்துச்செல்லப்படவில்லை.

— ரஃபேல் விமானங்கள் சரியான விலைக்கே கொள்முதல் செய்யப்படுகின்றன. அதிக விலை கொடுக்கப்படவில்லை என்றார் விமானப்படைத் தளபதி தனோவா. ஆயினும் ஒரு விமானத்தின் விலை என்ன என்ற தகவல் என்னிடம் இல்லை என்றும் சொன்னார் அதே பேட்டியில் அதே தளபதி தனோவா! விமானப்படைத் தளபதிக்கே தெரியாமல் போர் விமானங்கள் வாங்கப்படுவது மோடி அரசில் மட்டுமே சாத்தியம்.

— இதுபோன்ற விஷயங்களில் போர்விமானம் குறித்த தொழில்நுட்பம்தான் ரகசியமே தவிர, விலை ரகசியமாக வைக்கத் தேவையில்லை. ஆனால் மோடி அரசு விலையை ரகசியம் என்கிறது. முந்தைய காங்கிரஸ் அரசு விலையை ரகசியமாக வைக்கவில்லை.

ரபேல் ஊழலில் ரிலையன்ஸ் விவகாரம் வெளியே வந்ததும், “ரிலையன்சுக்கும் தஸால்டுக்கும் என்ன ஒப்பந்தம் என்று எங்களுக்குத் தெரியாது. தஸால்ட் தனக்கு விருப்பமான கூட்டாளியைத் தேர்வு செய்யலாம், அதற்கும் அரசுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது” என்று இத்தனை காலம் சொல்லிக் கொண்டு வந்தார்கள் மோடியும் அவரது ஊழல் கூட்டாளிகளும்

— ஆனால் “மோடி அரசு, ரிலையன்ஸ்தான் கூட்டாளியாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்தியது, எங்களுக்கு வேறு வாய்ப்பு இருக்கவில்லை” என்று முன்னாள் பிரான்ஸ் அதிபரே சொல்லி விட்டார். அவர்தான் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டவர்.

— மக்கள் பணத்தில் உருவான, இந்திய அரசுக்குச் சொந்தமான, பொதுத்துறை நிறுவனம் எச்ஏஎல் எப்படிப் போனால் என்ன, ரிலையன்ஸ்தான் தனக்கு முக்கியம் என்று சொல்லாமல் சொல்லி விட்டார் மோடி.

— 2015இல் தடாலடியாக அறிவிக்கும்போது இது ஜி2ஜி (கவர்மென்ட்-டு-கவர்மென்ட்) ஒப்பந்தம் என்று சொன்னார்கள். ஜி2ஜி என்றால் ரிலையன்ஸ் எப்படி வர முடியும்? எச்ஏஎல்தானே இருந்திருக்க வேண்டும்?

— எச்ஏஎல் நிறுவனத்துக்கு தகுதி கிடையாது, அது சீரழிந்து விட்டது என்று திருவாய் மலர்ந்தார் நிர்மலா சீதாராமன். அதே எச்ஏஎல் நிறுவனம் தேஜஸ் போர் விமானத்தை தயாரித்து விமானப்படைக்கு அளித்தபோது பிரதமர் வாழ்த்தியது இப்படி - Induction of indigenously made Tejas fighter jet into the Air Force fills our hearts with unparalleled pride and happiness. I laud HAL & ADA on the induction of Tejas fighter jet. This illustrates our skills & strengths to enhance indigenous defence manufacturing. (1 July 2016)

— 2016இல் சிறப்பாக செயல்பட்ட எச்ஏஎல் 2018இல் சீரழிந்து விட்டதா? அப்படியானால் அதற்குக் காரணம் இதே சர்க்கார்தான் என்கிறாரா நிர்மலா சீதாராமன்?

— இந்த ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனம் எப்போது உருவானது? மோடி பிரான்ஸ் செல்வதற்கு சில நாட்கள் முன்னதாக திடீரென உருவானதுதான் ரிலையன்ஸ் டிபென்ஸ். முதலீடு வெறும் 5 லட்சம் ரூபாய். கம்பெனி ரெஜிஸ்டிராரிடம் பதிவு செய்த விவரம் கீழே படத்தில் உள்ளது.

— வெறும் 5 லட்சம் ரூபாய் முதலீட்டில் நேற்று முளைத்த ஒரு கம்பெனிக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய போர் விமானங்களின் பணி தரப்படுவது மோடி சர்க்காரில் மட்டுமே சாத்தியம்.

— கடைசியாக முக்கியமான ஒரு விஷயம் : 2015 ஏப்ரலில் பிரான்ஸ் சென்ற மோடி, ரபேல் விமானம் வாங்கப்படும் என அறிவிக்கிறார். அப்போது அம்பானியையும் கூடவே அழைத்துச் சென்றிருக்கிறார். அதற்கு முந்தைய மாதம் வரை ரிலையன்ஸ் டிபென்ஸ் கம்பெனியே கிடையாது. ரிலையன்ஸ் டிபென்ஸ் கம்பெனி பதிவானது 2015 மார்ச் 28ஆம் தேதி. அதாவது, பிரான்ஸ் செல்வதற்கு ஒருவாரம் முன்னால் அம்பானியை கம்பெனி துவக்கச் செய்து, பிரான்சில் அம்பானியின் லாபத்துக்காக வேலை பார்த்திருக்கிறார் மோடி.

வழக்கு மொழியில் சொன்னால், இந்தியாவுக்காக அல்ல, ரிலையன்சுக்கு புரோக்கர் வேலை பார்த்திருக்கிறார்.


வளர்ந்த தமிழகம் - வளராத வட மாநிலங்கள்

ஒரு லட்சம் கோடி ரூபாயில் புல்லட் ரயில் விடும் தேசம் இந்தியா.

அதே இந்தியாவில் நகர பேருந்து என்றாலே தெரியாத பல மாநிலங்கள் இருக்கு.

உ.பியின் இரண்டாவது பெரிய நகரம், அரசியல் தலைநகரம் அலகாபாத். அந்த அலகாபாத்தில் மாநகர பேருந்துகள் எதுவும் கிடையாது
ஆட்டோ, சைக்கிள் ரிக்க்ஷா, குதிரை வண்டிதான் மாநகர போக்குவரத்து சாதனங்கள்.

அலகாபாத் ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்ததும் குபீர்னு ஒரு கெட்ட நாத்தம் அடிக்கும். அது குதிரை சாணி நாத்தம்.

இதுதான் உத்திரபிரதேசத்திற்குள் வந்துவிட்ட அறிகுறி.

அப்புறம் தார் ரோட்டு ஓரமாவும், எதாவது சுவர் இருந்தா அதெல்லாம் திட்டு திட்டா சிவப்பு சிவப்பா இருக்கும்.
அதெல்லாம் பான்பராக் வாயனுக வரைந்த கோலம்.

ஆங்கிலத்தில் சொல்லும் அட்ரசை புரிந்துகொள்ளக்கூடிய ஆட்டோ டிரைவர் உங்களுக்கு கிடைத்தால் அது உங்க முன்னோர் செய்த புண்ணியமாத்தான் இருக்கும்.

ஓரமா நின்னு எதையாவது நீங்க வேடிக்கை பார்த்துட்டு இருக்கும்போது எதுவோ ஒன்னு உங்களை உரசிக்கிட்டு போவும். அதன் பெயர் குதிரை என அறிக.

உண்மையிலேயே நம்மை பொறுத்தவரை அது வேறவொரு உலகம்தான்.

நான் என் நண்பர்களோட தங்கியிருந்தது நகரின் முக்கியமான பகுதி. அலகாபாத் உயர்நீதிமன்றத்திலிருந்து 500 மீ தொலைவில்தான்.

அவ்ளோ லேசுல ஆட்டோ கிடைக்காது. அதனால ஒரு குதிரை வண்டி புடிச்சி அலகாபாத் பஸ் நிலையம் வந்தோம்.

மாநில அரசு பேருந்துகள் பெருசா இல்லை. தனியார் பேருந்துகள் அரசு அங்கீகாரம் பெற்ற பேருந்து சேவை என்ற பெயரில் ஸ்வராஜ் மஸ்தா நிறைய நிற்கும். அதெல்லாம் மீரட், வாரணாசி, ஆக்ரான்னு வெளியூருக்கு போகும் பேருந்துகள் ( வேன் மாதிரி)

அங்க போயி ஒரு டிராஃபிக் போலிஸ்கிட்ட 'லோக்கல் பஸ் எங்க நிக்கும்'னு கேட்டேன்.

'கியா'ன்னான்.

புரியலை போலருக்குனு நினைச்சி 'சிட்டி பஸ் எதுவும் இல்லையா?'னு கேட்டேன்.

'அப்படின்னா?' என்ற மாதிரி என்னை பார்த்தான்.

சரி விளக்கமா சொல்லுவோம்னு நினைச்சி 'ஆனந்தபவன் போகனும் (நேரு ,இந்திரா காந்தி பிறந்த வீடு) எந்த பஸ்சுன்னு கேட்டேன்.

என்னமோ வின்னர் பட வடிவேலு காமெடியை பார்த்த மாதிரி கெக்கபிக்கேன்னு சிரிச்சான்.

' 5 கி.மீ தூரம் போக உனக்கு பஸ்சு கேக்குதா? இப்படியே இந்த ரோட்டு மேலயே முக்கா மணி நேரம் நடந்துபோனா ஆனந்தபவன் வரும்'னு சொல்லிட்டு சிரிக்கிறான்.

அசிங்கமா போச்சி.

கர்மம்புடிச்சவனுகளா உங்க ஊர்ல 5 கி.மீ தூரத்தைக்கூட நடந்துதான் போவீங்களாடான்னு நினைச்சி ஆட்டோ பிடிச்சோம் நேரு வீட்டுக்கு போக.

அப்பதான் தெரியும் அந்த ஊர்ல மெட்ரோ பஸ் எதுவும் இல்லை. உள்ளூருக்குள்ள பஸ்சில் போகும் பழக்கம் அந்த மக்களுக்கு இல்லைனு.

பெரும்பாலும் மக்கள் கால்நடையாதான் போறாங்க. காசு இருப்பவன் சைக்கிள் ரிக்க்ஷா, ஆட்டோ. இவ்ளோதான் அவுங்க போக்குவரத்து.

வெளியூர் போகனும்னா டிக்கெட் எடுக்காம ரயிலில் அன்லிமிடெட் பயணம்.

ஒரு மாநகரத்துக்கே இந்த நிலைமைனா கிராமப்புற பகுதிகளை நினைத்து பாருங்க.

இங்க நாம சிட்டி பஸ்,டவுன் பஸ், மின்சார ரயில், பறக்கும் ரயில்,மெட்ரோ ரயில் என அனைத்தையும் தாண்டி சின்ன சின்ன குக் கிராமங்கள்வரை மினி பஸ்சால் இணைத்து வைத்திருக்கிறோம்.

தற்போதைய தமிழகம் இருக்கும் இந்த கட்டமைப்புகளை எட்டிப்பிடிக்க இன்னும் 30 ஆண்டுகளாவது தேவைப்படும் உத்திரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களுக்கு.

ஒரு பக்கம் நகர பேருந்துகள் என்றாலே என்ன என தெரியாத மக்கள், இன்னொரு பக்கம் லட்சம் கோடி ரூபாயில் புல்லட் ரயில்.

ஒரு பக்கம் டிஜிட்டல் இந்தியா ,இன்னொரு பக்கம் மின்சாரம் என்றால் என்ன என்றே தெரியாத 38% கிராமங்களை கொண்ட தேசம்.

இந்த லட்சன கூந்தலில் 'கருப்பர்களான தென் இந்தியர்களோடு நாங்கள் சேர்ந்து வாழவில்லையா?' என எகத்தாளம்வேற.

இங்கு திமுக, அதிமுக , புதிதாக எதாவது ஒரு கட்சி என்ற எந்த ஆட்சி வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும். அது உங்களுக்கு பிடிக்காத ஆட்சியாகக்கூட இருக்கட்டும்.

ஒரு மாதம், ஒரே ஒரு மாதம் உ.பி, பீகார், ம.பி போன்ற மாநிலத்தில் தங்கி பாருங்கள். தமிழகத்தின் அருமை புரியும்.

#யாரோ_ஒருவன்.

மன்மோகன் சிங் - கிங்

மன்மோகன் சிங்குக்கு இணையாக இந்திய ஊடகத்தால் கேலிசெய்யப்பட்ட ஒரு பிரதமர் வேறு யாரும் கிடையாது. ஐக்கிய முற்போக்கு அரசாங்கம் ஆட்சியிலிருந்த போது இரண்டுவகையான தாக்குதல்களை ஆர்.எஸ்.எஸ் பரிவாரம் தொடுத்தது. ஒன்று திமுக உள்ளிட்ட கூட்டணிக்கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் போன்றோருக்கு அமைச்சராவதற்கு எந்தத்தகுதியும் இல்லை என்கிற பொய் பரப்புரை. வரலாற்றிலேயே முதன்முறையாக இந்திய ரயில்வேயை லாபகரமானதாக ஓடச்செய்த லல்லு பிரசாத், இந்திய தகவல் தொழில்நுட்ப இயக்கத்தையும் சந்தையையும் புரட்டிப்போட்டு, சாமானியரை அதிகாரம் பெறவைத்த ஆ.ராசா போன்ற யாருக்கும் 'அமைச்சராக தகுதியில்லை' என கூச்சமில்லாமல் மனுத்துவம் பேசியது ஆர்.எஸ்.எஸ் பரிவாரம்.

2ஜி விவாகாரத்தில் ஊடக அடியாட்கள் 'எந்தத் தகுதியும் இல்லாத... ஒரு சாதாரண வழக்கறிஞருக்கு எப்படி இவ்வளவு முக்கியமான துறையை ஒதுக்க முடியும்?' என கூவினார்கள்.

இன்னொருபுறம் இந்தியாவின் மிகச்சிறந்த நிதியமைச்சரான ப.சிதம்பரம், ராஜிய வல்லுனரான சல்மான் குர்ஷித், மிகவேகமாக இந்திய ராணுவத்தை நவீனப்படுத்திய மிகச்சிறந்த நிர்வாகியான ஏ.கே.அந்தோனி உள்ளிட்ட அனைவரின் அறிவையும், அனுபவத்தையும், உழைப்பையும் பிம்பக்கேலி செய்தார்கள். மிகப்பெரிய வெறுப்புக்குரியதாக அவர்களின் அறிவையும், ஆற்றலையும் ஆர்.எஸ்.எஸ் பரிவாரம் ஊடக அடியாட்கள் மூலம் கட்டமைத்தது.

சோகக்கொடுமை என்னவென்றால், உலகின் தலைசிறந்த தாராளவாத பொருளாதார நிபுணரான மன்மோகன் சிங் மிகக்கேவலமான முறையில் சீண்டப்பட்டுக் கொண்டே இருந்தார். அவரின் பொறுமை, அமைதி, நிதானம், சகிப்புத்தன்மை போன்ற தலைமைத்துவத்தின் மேன்மையான ஆகிருதிகளை 'கையாலாகத்தனம், லாயக்கற்றவர், வெறும் பொம்மை' என மீண்டும் மீண்டும் கூவச்செய்த பொதுவெளியில் அவரின் இயக்கத்தை குலைத்தார்கள். சல்மான் குர்ஷித் சொல்வதுபோல 'வெளியில் நிம்மதியாக நடமாட முடியாத அளவுக்கு நிம்மதியின்மைக்கு' ஆளாக்கினார்கள்.

பார்ப்பனிய ஜரூரியான ஜெயலலிதா ஏதோ குஸ்தி சண்டைக்கு, தொடைக்கு மேல் இடுப்புக் கச்சையை உருட்டிக் கொண்டு அழைப்பது போல தமிழ்நாட்டிலிருந்து மன்மோகனுக்கு வாய்ச்சவடால் விட்டுக் கொண்டிருந்தார். தன்முனைப்பைக் காட்டும் அசிங்கமான பிம்பத்தோற்றத்துக்காக, மன்மோகன் சிங்க்குக்கு தைரியமில்லை, வீரமில்லை என்கிற பொருள்பட தமிழ்நாடு முதலமைச்சர் லெட்டர் பேடை பயன்படுத்தி அதிகாரத் திமிறில் கடிதம் எழுதினார். நிலைமை எவ்வளவு மோசமானது என்றால், பிரதமர் அலுவலகத்திலிருந்து 'தயவுசெய்து இப்படி தரங்கெட்ட கடிதங்களை எழுதாதீர்கள்' என ஜெயலலிதாவைக் கேட்டுக்கொள்ளும் அளவுக்கு பரிதாபகரமானதாக இருந்தது.

2014 தேர்தல் உச்சக்கட்டத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கும்போது, 2014 ஜனவரியில் மன்மோகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். நீங்கள் 'weak' ஆன பிரதமர் என பாஜகவும், மோடியும் பிரச்சாரம் செய்கிறார்களே என்ற கேள்விக்கு :
'... அகமதாபாத் வீதிகளில் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்வதுதான் வலிமையான பிரதமருக்கான அளவுகோல் என்றால், அப்படிப்பட்ட வலிமையான பிரதமர் இந்தியாவுக்குத் தேவையில்லை' என நெற்றிபொட்டில் அடித்தார் போல பதிலளித்தார்.

அந்த பேட்டியில் தான், 'History will be kinder to me than contemporary media' என்கிற மகத்தான வாசகத்தை அவர் பிரயோகித்தார். ஆனால், அந்த வாசகத்தை அன்றைக்கு அத்தனை பத்திரிக்கைகளும் கேலி செய்தன. கிண்டலான, நக்கலான தலையங்கங்களை எழுதின.

2014ம் ஆண்டு தேர்தல் முடிந்த ஓராண்டில் 2015ல் பீகாரில் தேர்தல் நடந்தது. ஓராண்டுக்குள்ளாகவே மாட்டுக்கறி சர்ச்சையால் வட இந்தியா குலுங்கியது. 2015 பீகார் தொடர்பான செய்திகளைச் சேகரிக்கும் போதே, மன்மோகன் சிங் எப்படி தவறாக புரிந்துகொள்ளப்பட்டார் என்பது தொடர்பான கட்டுரைகள் வெளியாகிக் கொண்டிருந்தன. 'அய்யா எங்களை செருப்பால அடிங்கய்யா' என்கிற கவுண்டமணியின் மீம்ஸ்கள் 2015 தொட்டே வரத்தொடங்கிவிட்டன.
இதோ, 4 1/2 ஆண்டு மோடி ஆட்சி முடிந்திருக்கிறது.

இந்தியாவின் எந்தவீதியும் அகமதாபாத் போன்ற தசைக்குவியலில், ரத்த ஆறில் நனையக்கூடும் என்கிற அச்சம் இருக்கிறது. 4 ஆண்டுகள் என்பது வரலாறுக்கு ஒரு கணக்கே கிடையாது. வரலாற்றின் கடலுக்கு முன்பு 4 ஆண்டுகள் என்பது ஒரு துளி போன்றது. ஆனால், மன்மோகன் சிங் சொன்னது பலித்திருக்கிறது !

சுதந்திர இந்தியாவில் மன்மோகன் வகித்த பாத்திரம் மிக மிக மிக வித்யாசமானது; காலத்தால் திணிக்கப்பட்டது.

ஒரு சிக்கலான கூட்டணி ஆட்சியை வைத்துக்கொண்டு, மிக சிக்கலான கட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளால் தான் இன்றைக்கு இந்தியா பிழைத்திருக்கிறது. ஒன்று பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு - வி.பி.சிங். தந்தது.

இன்னொன்று தாராளமயமாக்கம் கொண்டுவரப்பட்ட முதல் 15 ஆண்டுகள், அதைக் கையாள்வதில் உள்ள சிக்கல்களால் இந்தியா திணறிக்கொண்டிருந்தபோது 'தாராளமயமா